மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்கானது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாபநாசம். மேலும் இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடிகை நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் நடித்திருப்பார்கள்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, வசூல் சாதனையும் படைத்தது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமானவர் எஸ்தர் அணில். மேலும் சமீபத்தில் கூட த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைம் ஓடிடி யில் வெளியாகி ஹிட்டானது. இவர் மலையாளத்தில் நல்லவன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின்னர் நடிகை எஸ்தர் அணில் மலையாளத்தில் ட்ரீஷியம் மற்றும் தெலுங்கில் திருஷ்யம் திரைப்படங்களிலும், இதே கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.
மேலும் தமிழ் படமான குஜாலியில் அவர் கதாநாயகியாக நடித்தார். இளம் நடிகை எஸ்தர். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாயடைக்க செய்வார். அவர் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு தற்போது நன்கு வளர்ந்து செம மாடர்னாக உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.
View this post on Instagram