தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர், என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். இதன் மூலம் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தார்.
மேலும் இவர் நானும் ரவுடி தான், மிருதன், பாஸ் என்கிற பாஸ்கரன், உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மலையாள படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவது வழக்கம். இதனிடையே, அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தின் ஸ்டோரியில் தற்போது நான், விஸ்வாசம் திரைப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாக பலரும் என்னை பாராட்டுகின்றனர்.
ஆனால், அதே நேரத்தில் என்னிடம் பலர் கூறுவது என்னவென்றால் நான் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறேன் என்றும் இன்னும் நான் வளர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதன் காரணமாகத் தான் நான் அதிகமாக வெளியே செல்வதில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். இப்பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.