ஏடிஎம் கியாஸ்க்கில் இருந்து சானிடைசர் பாட்டிலை ஒருவர் தி.ரு.டு.ம் சிசிடிவி வீடியோ காட்சி, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஏடிஎம் கியாஸ்க்கில் இருந்து ஒருவர் சானிடைசர் பாட்டிலை தி.ரு.டும் சிசிடிவி வீடியோவை, ஐபிஎஸ் போ.லீ.ஸ் அதிகாரி திபான்சு காப்ரா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ, தற்போது இணையதள உலகில் பெரும் வைரல் ஆகி வருகிறது. 33 வினாடிகள் கால அளவிலான இந்த வீடியோவை, இதுவரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வை இட்டுள்ளனர்.
அந்த சிசிடிவி வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, ஒரு இ.ளை.ஞர், ஏடிஎம் மெஷினில் பணத்தை எடுத்தபிறகு, ஏடிஎம் கார்டை அதில் இருந்து வெளியே எடுக்கிறார். ஏடிஎம் மையத்தில் இருந்து வெளியே செல்ல முற்படும்போது, ஏடிஎம் மெஷின் அருகே இருந்த ஸ்டாண்டில், சானிடைசர் பாட்டில் இருப்பதை கண்டார். உடனே, அந்த ஸ்டாண்டில் இருந்த சானிடைசர் பாட்டிலை, கையில் எடுத்தவர், அதை தனது பைக்குள் போட்டுக் கொண்டு, அந்த ஏடிஎம் மையத்தில் இருந்து வெளியேறுகிறார்.
இந்த காட்சிகள் அனைத்தும், அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை, நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி திபான்சு காப்ரா, இந்த வீடியோவை, டுவிட்டரில் #HumNahiSudhrenge என்ற ஹேஸ்டேக் இட்டு பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோவுக்கு, நெட்டிசன்கள் பல்வேறு வகையான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.