பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகி விடலாம் என்ற அளவிற்கு இந்த பிக்பாஸ் நிழ்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து புகழின் உச்சத்தில் இருப்பவர் தான் நடிகை லொஸ்லியா. இலங்கையை இருப்பிடமாகக் கொண்ட இவர் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு மிகவும் அட்டகாசமாக விளையாடியது மட்டுமின்றி உண்மையாகவும் இருந்து மூன்றாவது இடத்தினை பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தினால் இவரது அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்து லொஸ்லியாவை பயங்கரமாக திட்டவும் செய்தார். இந்நிலையில் கடந்த லொஸ்லியாவின் தந்தை திடீரென மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். தற்போது லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் சீசன் 4 வின்னரான ஆரியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் தான் லாஸ்லியா மற்றும் தர்ஷன், இவர்கள் இருவரும் தற்போது கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர். எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் தற்போது இரட்டை ஜடை போட்டுக்கொண்டு அட்டகாசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
. #Losliya pic.twitter.com/G27JtHV94a
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) March 4, 2021