இலங்கை தமிழராக மாறிய விஜய் சேதுபதி! வெளியான தகவல்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் மனதில் இடம் பிடித்து மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் பதித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவகாற்று திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாகனாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்பு புதுபேட்டை, நான் மகன் அல்ல போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. அதன் பின்பு பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த கானம் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்று மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டார்.

   

தற்போது இவர் நடிப்பில் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம் குறித்து பிரத்யேக பிரத்தியேக டீசர் வெளிவந்துள்ளது. வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். அடுத்தாக அந்தாதூன் திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் அடுத்து இயக்கப் போகும் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இலங்கை தமிழராக நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் டீசர் கூட வெளியானது. இந்நிலையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் முதல் பாடலான ‘முருகா’ பாடல் நடிகர் சிலம்பரசன் குரலில், நிவாஸ் கே பிரசன்னா இசையில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.