உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை அனுயா.. வெளியான புகைப்படம்- ஷாக்கில் ரசிகர்கள்

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் அனுயா பாகவத். அதையடுத்து மதுரை சம்பவம், நகரம், நான் என சில படங்களில் மட்டுமே நடித்தார். திடீரென உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. அவருக்கு கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்காமல் கேரக்டர் ரோல்களே கிடைத்து வந்ததால் அந்த கோபத்தில் சொந்த ஊரான மும்பைக்கு ரிட்டனாகி விட்டார்.

   

இதன்பின் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து வந்த நடிகை அனுயா பாகவத், மீண்டும் நண்பன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தோன்றினார். அதையடுத்து கோரா என்ற பெங்காலி படத்தில் நடித்துள்ளார். ஆனால் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், படங்களில் நடிகை அனுயா பாகவத்வை காணமுடியவில்லை. மேலும் இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1ல் முதல் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு ஒரு டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இவர். தற்போது, வெப்சீரிஸ்களில் நடித்து வரும் நடிகை அனுயா பாகவத் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ள, சமீபத்திய புகைப்படம் வெளியாகி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..