உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன்.. 190 கிலோயை குறைத்து அழகிய இளைஞனாய் மாறிட்டாரே!! இதோ நீங்களே பாருங்க

உலகிலேயே அதிகமான பருமன் கொண்ட சிறுவனான இந்தோனேசிய சிறுவன் ஒருவன் உடல் இளைத்து ஆளே மாறிப்போய்விட்டான். வெறும் 11 வயதில் கிட்டத்தட்ட 190 கிலோ எடை இருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த Arya Permanaதான், உலகிலேயே அதிக பருமனான சிறுவன் ஆவான். ஆனால், இப்போது 14 வயதாகும் Arya, ஆள் ஏற்கனவே இருந்ததற்கு பாதிக்கும் அதிகமாக இளைத்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டான். Cipurwasari என்ற கிராமத்தில் வாழும் Arya, தனது உடல் சூட்டைக் குறைப்பதற்காக தண்ணீர் தொட்டி ஒன்றில் கிடத்தப்பட்டிருக்கும் புகைப்படங்களைக் கண்டு மருத்துவர்களே மலைத்துப்போனார்கள்.

   

நன்றாக நொறுக்குத்தீனி சாப்பிடுவதும், தண்ணீருக்குள் படுத்து உடல் சூட்டைத் தணித்துக்கொள்வதுமாக Aryaவின் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. உடல் பருமன் காரணமாக நடக்க முடியாததால் அவன் பள்ளிக்கும் போகமுடியவில்லை. அவனது உடல் பருமனைக் கண்ட மருத்துவர்கள், அவனுக்கு அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்து அவனது இரைப்பையின் அளவைக் குறைத்தனர், அதனால் அவனுடைய உணவு எடுத்துக்கொள்ளும் அளவு குறையும். அதன் பிறகு மூன்றே வாரங்களில் Aryaவின் எடை 186.4 கிலோவிலிருந்து 169 கிலோவாகக் குறைந்தது.

பின்னர், உணவுக்கட்டுப்பாடு, மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சி மூலம் தன் உடல் எடையை 82 கிலோவாகக் குறைத்துள்ளான் அவன். இப்போது மரம் ஏற்கிறான், ஏன் மோட்டார் சைக்கிள் கூட ஓட்டுகிறான் அவன். கூடைப்பந்து முதலான விளையாட்டுகளை விளையாடுவது, தினமும் 3 கிலோமீற்றர் நடப்பது என வாழ்க்கை முறையே மாறிப்போய், பள்ளிக்கும் நடந்தே போகத் தொடங்கிவிட்டான் Arya.