உலக நாயகன் கமல் ஹாசனுக்கு பரிசு கொடுத்த ஸ்ருதியின் புதிய காதலன்! நெகிழ்ச்சியில் கமல் செய்த செயலை பாருங்க..!

நடிகை ஸ்ருதி ஹாசனின் காதலர் சாந்தனு ஹசாரிகா உலக நாயகன் கமலுக்கு ஒரு பரிசு கொடுத்திருக்கிறார். அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் கமல் ஹாசன். ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது எஸ்பி ஜெகந்நாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார்.

   

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கோர்சலே என்பவரைக் காதலித்து வந்தார். பின்னர் அவரைப் பிரிந்தார். ஸ்ருதி ஹாசன் தற்போது கவுஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற ராப்பர் பாடகரைக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. சாந்தனு ஹசாரிகா 2014 டூடுல் ஆர்ட் (Doodle Art) போட்டியில் சிறந்த டூடுல் கலைஞர் பட்டம் வென்றதாகக் கூறப்படுகிறது.

அவர் நேற்று முன்தினம் சென்னை வந்துள்ளார். சென்னை வந்து கமல் ஹாசனை சந்தித்து பேசிய ஸ்ருதியின் காதலர் சாந்தனு ஹசாரிகா அவருக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறார். அப்போது இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் மாஸ்க் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)