எங்கிட்ட 1500 ரூபாய்க்கு மேல புடவையே இல்ல…நீயா நானாவில் ஆச்சர்யப்பட வைத்த நடிகை… ஷாக்கில் கோபிநாத்!

இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில், புடவைகளின் மீது பெரும் ஆர்வம் கொண்ட பெண்கள் மற்றும் பெரிதாக விருப்பமில்லாத பெண்களுக்கான விவாதம் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகை ரித்திகா பங்கேற்றுள்ளார். அதில், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொன்னார்.

   

அப்போது கோபிநாத், “உங்களால் மறக்க முடியாத புடவை எது?” என கேட்டார்.

அதற்கு, தான் முதன் முதலில் சம்பாதித்த சம்பளத்தை வைத்து எடுத்த புடவை என்பதால் அது மிகவும் ஸ்பெஷல் என்றும், தான் விலை காஸ்ட்லியாக தான் இருக்க வேண்டும் என பார்த்து புடவை எடுப்பதில்லை என்றும்,

தனக்கு பிடித்த தனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு புடவை 200 ரூபாய், 500 ரூபாயில் கிடைத்தாலும் அதை எடுத்துக்கொள்வதாகவும், அதற்காக காஸ்ட்லியான விலையில் மட்டும்தான் எடுக்க வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அதாவது புடவை பிடித்திருந்தால் மட்டும் போதுமானது, அதன் விலை குறைவாக இருப்பதில் ஆட்சேபணை இல்லை.

அதைவிட புடவை எடுப்பதை ஸ்டேட்டஸூடன் சேர்த்து பார்ப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படுத்திய ரித்திகா, தன்னிடம் அதிகபட்சமாக 1500 ரூபாய்க்கு மேல புடவையே இருக்காது, 150 ரூபாய்க்கு காட்டன் புடவையானாலும் எடுப்பேன் என இந்நிகழ்ச்சியில் தான் அணிந்திருந்த புடவை 1100 ரூபாய் என குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி, வரும் ஞாயிறு அன்று மதியம் 12:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.