எனது படத்தில் நடித்த காமெடி நிஜத்தில் நடக்குது… மில்லியன் பேரை சிந்திக்க வைத்த வடிவேலுவின் விழிப்புணர்வு வீடியோ

கொரோனா பரவல் காரணமாக அனைத்து படங்களின் வேலைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோலிவுட் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே கொரோனாவால் முடங்கிப் போய் உள்ளது. இந்நிலையில் தனது படத்தில் நடித்த காமெடி, நிஜத்தில் நடந்து வருவதை யதார்த்தமாக, நகைச்சுவை கலந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோவாக வடிவேலு பேசி உள்ளார்.

   

இந்த வீடியோ தற்போது பலராலும் பார்த்து, ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் வடிவேலு, தற்போதுள்ள சூழலில் எந்த தயாரிப்பாளரும் படம் பண்ண தயாராக இல்லை. எந்த நடிகரும் நடிக்க தயாராக இல்லை.

ஆனால் இந்த சமயத்தில் கொரோனா என்ற படத்தை கடவுள் ரிலீஸ் செய்திருக்கிறார். இந்த படத்தை பார்க்க வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருந்து பாருங்கள் என அறிவுறுத்தி உள்ளார்.