இந்தியாவில் பிரபல நடிகை சம்பவனா சேத்தின் தந்தை கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையின் அலட்சித்தியதால் அவர் உயிரிழந்தார் என நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார்.
போஜ்புரி நடிகையான சம்பவனாவின் தந்தை எஸ்.கே சேத்துக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனை தான் தனது தந்தையை கொன்றுவிட்டது என பரபரப்பு குற்றச்சாட்டை சம்பவனா முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு தனது தந்தை உயிருக்கு போராடும் கடைசி நொடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், எல்லா மருத்துவர்களும் கடவுளுக்கு ஈடானவர்கள் கிடையாது. வெள்ளை கோட் அணிந்து நம் அன்புக்குரியவர்களைக் கொன்று குவிக்கும் சில தீயவர்களும் உள்ளனர். இந்த வீடியோவை எடுத்த அடுத்த 2 மணி நேரத்தில் என் தந்தை இறந்துவிட்டார்.
அவர் மருத்துவ ரீதியாக கொலை செய்யப்பட்டார் என்று நான் சொல்ல வேண்டும். இப்போது நான் அச்சமின்றி என் தந்தை வாழ்நாள் முழுவதும் கற்பித்த சத்தியத்திற்காக போராடப் போகிறேன்.
இது போல அலட்சியங்களை உங்களில் பலரும் மருத்துவமனைகளில் சந்தித்திருப்பீர்கள் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் சம்பவனாவிடம் மோசமான முறையில் பேசிய செவிலியரின் பெயரை அவர் கேட்கிறார்.
தந்தையின் ஆக்சிஜன் அளவு 55 என்ற அளவுக்கு குறைந்த போதும் அது நார்மல் என செவிலியர் கூறுகிறார். இதோடு மூச்சுவிட சிரமப்படும் தந்தையின் காட்சிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.