ஐஸ்வர்யாராயுடன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பிக்பாஸ் ஆரி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிகழ்ச்சிகளில் மிக பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. நான்கு சீசன்களை கடந்து தற்போது 5வது சீசனை தொடங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது. மேலும், இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனாவால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறாததால் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை கூடுதல் கவனத்துடன் செயல்படுத்தி வருகின்றனர்.

   

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான ரியோ, நிஷா, கேபிரியால, ஆஜித், ரம்யா, பாலாஜி, அனிதா, சோம் சேகர் என 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கதறிவிட்டவர் தான் நடிகர் ஆரி அர்ஜுனன். சமூகஅக்கறைக் கொண்ட இவரை உள்ளே இருந்த போட்டியாளர்கள் ஒதுக்கியே வைத்திருந்தனர். ஆனால் இதை எதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத ஆரி தனியாகவே விளையாடி வந்தார்.

இதனால் வெளியில் இருந்த ரசிகர்களுக்கு ஆரியை அதிகமாக பிடித்துவிட்டது மட்டுமின்றி அவரை வெற்றிக்கோப்பையை பெறவும் வைத்தனர். அதில் பாலாஜி இரண்டாம் இடம் பிடித்தார். இந்நிலையில் ஆரி தனது 24 வயதில் ரெட்டைச்சுழி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் ஐஸ்வர்யா ராயுடன் கலந்து கொண்ட புகைப்படத்தினை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.