கடற்கரைக்கு சென்ற பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிசயம்..

தாய்லாந்தின் நக்ஹோன் சி தம்மரெட் மகாணத்தில் இருக்கும் கடற்கரைக்கு, கடந்த 23-ஆம் திகதி ஒரு கடுமையான மழைக்கு பிறகு சிரிபான் (49) என்ற பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பெரிய வெள்ளை நிறத்தில், பொருள் கடலின் ஓரத்தில் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதைக் கண்ட அவர் அருகில் சென்று பார்த்த போது, அது ஒரு வாசனையாக இருந்துள்ளது. ஆம் விலை உயர்ந்த திமிங்கலத்தின் வாந்தி. திமிங்கலத்தின் வாந்தி ஒரு அறிய பொருள், அது அதன் விந்தணுச் சுரப்பியில் இருந்து வெளிப்படும் மெழுகு போன்ற பொருளை உள்ளடக்கி உருவாகும்.

   

இது, வாசனை திரவியங்களின் முக்கிய பொருளாகும். திமிங்கலத்தின் வாந்தி கலந்து உருவாக்கப்படும் வாசனை திரவியங்கள் விலை உயர்ந்தவை. அப்படிப்பட்ட அரியவகை பொருளான திமிங்கலத்தின் வாந்தியை பெறுவதற்கு முன்னணி வாசனை திரவிய நிறுவனங்கள் காத்துக்கிடக்கின்றன. சுமார் 12 அங்குல அகலம், 24 அங்குல நீளம் கொண்ட அந்த Ambergris 6.8 கிலோ இருந்துள்ளது, இது அப்படி உண்மையான திமிங்கலத்தின் வாந்தியாக இருந்தால், இதன் மதிப்பு, 186,500 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 3,59,83,998 கோடி ரூபாய்) ஆகும்.

அது தான் கடற்கரையில் சிரிபானுக்கு கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் வாந்தியைத் தான் சிரிபான் கண்டெடுத்துள்ளார். தற்போது விற்பனையை எதிர்பார்த்து காத்திருக்கும் சிரிபான், இது தனக்கு அதிர்ஷ்டம் இதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும். தன் குடும்பத்தின் வாழ்வாதாரமே மாறவுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.