கணவனை பிரிந்து வாழ்ந்த வந்த 38 வயது பெண்ணை திருமணம் செய்து இளைஞர் செய்த விபரீத செயல்!!

தமிழகத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவனின் குடும்பத்தார் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருபவர் கல்பனா. 38 வயதான இவர் தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் 10 வருடங்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

   

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக கல்பனா தனியார் விடுதியில் தங்கி, தஞ்சாவூரில் உள்ள ஒரு வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது பேஸ்புக் மூலம்,ஆவடி அண்ணா நகரைச் சேர்ந்த 35 வயதான பிரசன்ன வெங்கடேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. பிரசன்ன வெங்கடேஷ் தனியார் கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

ஆரம்பத்தில் நண்பர்களாக பேசி வந்த இவர்கள், அதன் பின் அது காதலாக மாற, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன் படி இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையில் உள்ள,

திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களில் பிரசன்ன வெங்கடேஷ் தன்னுடைய தாய், தந்தையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென்று ஒருநாள் பிரசன்ன வெங்கடேஷின் பெற்றோர் மற்றும் அவருடைய தங்கை ஆகியோர் கல்பனாவிடம், வேறொரு ஆண் வீட்டிற்கு வருவார் என்றும் அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கணவர் வந்தவுடன் கூற, அவரும் மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு மறுத்தால், நாம் இருவரும் தனிமையில் இருக்கும் போது ரகசியமாக எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

கல்பனா இதற்கு மறுத்ததால், அவரை அடித்து உதைத்ததுடன், அவரிடம் இருந்த 5 பவுன் நகை மற்றும் வங்கிக்கணக்கில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை பறித்து மிரட்டி வந்துள்ளனர்.

ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பிய கல்பனா, வெங்கடேஷ் வேலை செய்யும் தனியார் கம்பெனிக்கு சென்று விசாரித்தபோது அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதும், அந்த பெண்ணும் அதே நிறுவனத்தில் பகுதிநேரகமாக வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த கல்பனா, அவரைப் பற்றி தொடர்ந்து விசாரித்த போது, அவர் இது போன்று பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

உடனடியாக கல்பனா இது குறித்து, ஆவடி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பிரசன்ன வெங்கடேசனின் தந்தை ரங்கசாமி, அம்மா விஜயா, சகோதரி புவனேஸ்வரி உட்பட 4 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.

அதன் பின் அவர்களை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.