கணவர், குழந்தை குறித்து கேட்ட ரசிகர்.. புகைப்படத்துடன் பதில் அளித்த தொகுப்பாளினி பாவனா!

தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வரும் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். டிடி மத்தியில் சமீபத்தில் வந்த ஜாக்லின் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொகுப்பாளினிகள் ஏராளம். விஜய் டிவியில் ஹிட் ஆன தொகுப்பாளினிகளில் தொகுப்பாளினி பாவனாவும் ஒருவர் என்று தான் கூற வேண்டும்.

   

தொகுப்பாளினி பாவனா, ராஜ் தொலைக்காட்சியில் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர். தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். இவரது குரலை பலரும் கிண்டல் செய்துள்ளார்கள், ஆனால் அதை ஜாலியாகவே எடுத்துக் கொள்வார். இப்போது கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதனை தொடர்ந்து தனியாக இசை ஆல்பங்களையும் உருவாக்கி வருகிறார். அண்மையில் இன்ஸ்டாவில் ஒரு ரசிகர் பாவனாவிற்கு குழந்தை குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் குழந்தை இல்லை, ஆனால் எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் என நாய்க்குட்டி புகைப்படத்தை போட்டுள்ளார். திருமணம் குறித்து மற்றொரு ரசிகர் கேட்க, 10 வருடம் ஆனது என கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.