காதலன் விக்னேஷ் சிவனுடன் கொண்டாட்டத்தில் இறங்கிய நயன்தாரா!! தீயாய் பரவும் வீடியோ

தமிழ் திரையுலகில் தங்களுடன் ஒன்றாக நடித்தவர்களையே காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். பிரபலங்களில் சூர்யா-ஜோதிகா ஜோடி தான் அதிகம் கொண்டாடப்பட்டது. அடுத்து அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா என பிரபலங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்கள். அடுத்தபடியாக சூப்பர் ஜோடிகளாக இணைந்துள்ளார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

   

நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படப்பிடிப்பிலிருந்து விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதலிக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் காதலை உறுதிப்படுத்திய அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று ஒன்றாக சுற்றி ஜாலி டூர் அடிப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது என்று தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவது வழக்கம்.

விசேஷ நாட்கள் வந்தால் இவர்களது ஜோடியான புகைப்படங்கள் வந்துவிடும். சமீபத்தில் நயன்தாரா ஒரு ஜோசியரிடம் தன்னுடைய கல்யாணத்துக்கான தேதியை கேட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதற்கு அவரும் மார்ச் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியை குறித்து கொடுத்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவனை பிறந்தநாளை கொண்டாடிய ஒரு பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.