காதலியை ஆணவ கொலையில் இருந்து தடுக்க இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்!!

காதலியை ஆணவ கொலையில் இருந்து தடுக்க காதலி வீட்டு முன்பு இளைஞர் தீக்குளித்த சம்பம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள தருமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் விஜய் (25). இவர் காரைக்குடி அமராவதி புதூர் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. படித்துள்ளார்.

   

அதே கல்லூரியில் காரைக்குடி அருகே உள்ள மீனாவயல் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை என்பவரின் மகள் அபர்ணா ஸ்ரீயும் படித்து வந்துள்ளர். ஒரே வகுப்பில் படிக்கும் போது விஜய் மீது அபர்ணாஸ்ரீக்கு காதல் இருந்துள்ளது. இதையடுத்து, தனது காதலை விஜய்யிடம் அபர்ணா ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில், அபர்ணாவின் காதலை ஏற்க விஜய் மறுப்பு தெரிவித்தள்ளர். பின்னர் தொடர்ந்து அபர்ணாஸ்ரீ காதல் தொல்லை கொடுக்க, ஒரு கட்டத்தில் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருவரும் இரு சக்கரவாகனத்தில் சுற்றி திரிவதும், தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசுவதுமாக தங்கள் காதலை மேலும் வளர்த்துள்ளனர்.

இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு முடித்து விஜய் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனிடையே, அபர்ணாஸ்ரீ வீட்டிற்கு இவர்களின் காதல் விவகாரம் தெரிய வர பெற்றோர் கண்டித்து அபர்ணாவின் செல்போனை பிடிங்கி வைத்துக் கொண்டனர்.

தனது, நிலைமையை அபர்ணாஸ்ரீ காதலன் விஜய்யிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அபர்ணா ஸ்ரீயை, விஜய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து காதலியின் பெற்றோர், உறவினர்களிடமும் சென்று தனக்கு அபர்ணாஸ்ரீயை திருமணம் செய்து வைக்குமாறு மன்றாடி கேட்டுள்ளார்.

ஆனால் காதலி வீட்டில் பெண் கொடுக்க முடியாது என பிடிவாதமாக தெரிவித்துள்ளனர். மேலும், என் பிள்ளையை கொலை செய்தாலும் செய்வேனே தவிர உனக்கு கட்டி வைக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய், காதலியின் பெற்றோரிடம் அடுத்த வாரம் வருவேன் பெண் தர வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பெண்ணின் தரப்பில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை காதலி அபர்ணா ஸ்ரீ வீட்டிற்கு வந்த விஜய் மீண்டும் தன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அப்போது காதலியின் பெற்றோர் அபர்ணாஸ்ரீயை பார்த்து நீ செத்தால் எல்லாம் சரியாகிடும் என கடுமையாக திட்டியதால் மன வேதனையடைந்த விஜய், உங்கள் மகள் மீது நான் கொண்ட காதல் உண்மையானது.

காதலுக்காக உங்கள் மகளை நீங்கள் கொலை செய்ய வேண்டாம். அவள் உயிரோடு இருக்க வேண்டும், நானே என் உயிரை மாய்த்துக் கொள்கிறோன் என்று காதலி வீட்டின் முன் தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி விஜய் தீ வைத்துக் கொண்டுள்ளார்.

தீ மளமளவென அவர் மீது பற்றி எரிந்தது. இதில் விஜய் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தீயை அனைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவம் இடம் வந்த போலீசார் விஜயின் உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துமேல் விசாரணை செய்து வருகின்றனர் தான் காதலித்த பெண்ணை ஆணவ கொலை செய்து விட வேண்டாம் என கூறி பொறியியல் பட்டதாரி இளைஞர் காதலி வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.