காதலை உண்மை என நிரூபிக்க சொன்ன இளைஞன்! விபரீதத்தில் முடிந்த பள்ளி மாணவியின் செயல்

இந்தியாவில் இளைஞன் மீதான தனது காதலை நிரூபிக்க விஷம் குடித்த மைனர் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ரியா. இவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். மாணவி ரியா இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த இளைஞர் ரியாவிடம், நீ உண்மையிலேயே என்னை காதலிக்கிறாயா? உன்னுடைய உண்மை காதலை நிரூபிக்க விஷம் குடிப்பாயா என கேட்டுள்ளார்.

   

காதல் கூறியதை கேட்டு தனது காதலை உண்மை என நிரூபிக்க வேண்டும் என மாணவி ரியா முடிவு எடுத்துள்ளார். இதன் காரணமாக பக்குவம் அடையாத சிறுமியான ரியா காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் விஷம் குடித்திருக்கிறார். தனது காதலை நிரூபிக்க செய்த செயல் மாணவி ரியாவிற்கு ஆபத்தாக முடிந்தது.

விஷம் குடித்த சிறுது நேரத்திலேயே ரியா உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவி ரியா உயிரிழந்தார். இதனை அறிந்த பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.