காமெடி நடிகர் கவுண்டமணி உச்சத்தில் இருந்தபோதே எவ்வளவு சம்பளம் தெரியுமா? ஹீரோக்களுக்கு கூட அவ்வளவு சம்பளம் இல்லையாம்..!

காமெடி நடிகர்களில் கவுண்டமணி-செந்தில் இடத்தை இன்று வரை யாராலும் பிடிக்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் உச்சம் என்றால் கவுண்டமணி தான். நக்கலும் நையாண்டியும் கலந்த தன்னுடைய காமெடி காட்சிகளால் அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார். ’16 வயதினிலே’ எனும் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார் கவுண்டமணி. இதன்பின் நெற்றிக்கண், வைதேகி காத்திருந்தாள், ஜப்பானில் கல்யாணராமன், கன்னி ராசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி கதாபாத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

   

கவுண்டமணி டென்ஷன் ஆகி நடிக்கும் காட்சிகளுக்கு இன்றும் தொலைக்காட்சிகளில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக நடித்து பின்னர் முழுநேர காமெடியனாக மாறி தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார். இந்நிலையில், கவுண்டமணி தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு ஒரு படத்திற்கு 35 லட்சம் சம்பளம் கொடுத்தார்களாம்.

அப்போது ஹீரோவாக நடித்த பல முன்னணி நடிகர்களுக்கும் அவ்வளவு சம்பளம் இல்லையாம். ஆனால் கவுண்டமணி ஒரு படத்தில் நடித்தால் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அவருக்கு தயாரிப்பாளர்கள் லட்ச லட்சமாக கொட்டி கொடுத்தார்களாம். இன்று ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கினாலும் மக்களுக்கு திருப்தியான காமெடி காட்சிகளை கொடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர்.