காமெடி நடிகர் பரோட்டா சூரியா இது? கல்யாணத்தின்போது எப்படி இருக்காருன்னு பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் நகைச்சுவை நடிகர்களில் சூரியும் ஒருவர். இதுவரை காமெடியனாகவே நடித்துவந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.

   

தமிழர்களுக்கு பரோட்டாவைப் பார்த்தாலே இப்போதெல்லாம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சூரியின் காமெடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பரோட்டா சூரி இப்போது பேமஸ். ஆனால் மனிதரின் ஆரம்பகால வாழ்க்கை ரொம்பவே ப ரிதாபமானது. லாரியில் கிளீனராகக்கூட வேலைசெய்து பலகட்ட போ ராட்டங்களுக்கு பின்புதான் திரைத்துறையில் நுழைந்தார்.

க ரோனா வை ரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்த சமயத்தில் வீட்டில் இருந்த சூரி, தன் வீட்டு குழந்தைகளோடு சேர்ந்து கரோனா விழிப்புணர்வு வீடியோவையும் தொடர்ந்து வெளியிட்டார். தன் சொந்த ஊர் மக்களுக்கும் நிதி உதவி செய்திருந்தார் சூரி. அதன் தொடர்ச்சியாக சினிமா வாய்ப்பு இல்லாததால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பெப்சி திரைத் தொழிலாளர்களுக்கு 25 கிலோ அரிசி வீதம் 100 பேருக்கு வழங்கினார். இதேபோல் துணை நடிகர் சங்கத்துக்கு 25 கிலோ வீதம் 20 மூடை வழங்கியுள்ளார்.இந்த அளவுக்கு இன்று உதவியும், நேசமும் காட்டிவரும் சூரி மிகவும் க ஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு உயர்ந்தார்.

இப்போது சினிமாவைத்தாண்டி சில இடங்களில் உணவகமும் நடத்திவருகிறார் சூரி. சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு தான் சூரிக்கு அறிமுகப்படம். இப்போது க ரோனாவின் இரண்டாவது அலையில் சூட்டிங் இல்லாமல் வீட்டில் ரிலாக்ஸ்டாக இருக்கும் புரோட்டா சூரி, தன் குழந்தைகளை வைத்து அவ்வப்போது காமெடி வீடீயோக்களை செய்து வருகிறார். அந்தவகையில் இப்போது கடந்த 2009 ஆம் வருடம் தன் கல்யாணத்தின் போது, இருக்கும் தன் புகைப்பட ஆல்பத்தைக் காட்டி தன் குழந்தைகளிடம் பேசுகிறார். அதில் கல்யாண ஆல்பத்தில் அடையாளமே தெரியாமல் இருக்கிறார் புரோடா சூரி, அவர் தன்னைத்தானே கலாய்த்துக்கொள்ளும் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by KOLLY CINEMA (@kollycinema_)