காமெடி நடிகர் வடிவேலுவா இது? என்ன இப்படி ஆகிட்டாரு.. வெளியான சமீபத்திய புகைப்படம்- ஷா க்கில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் மற்ற நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருந்தாலும் இந்த காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்ததில்லை. இப்படி சீசனுக்கு சீசன் எதாவது ஒரு காமெடி நடிகர்கள் கலக்கி வருவார்கள். காமெடி நடிகர்களில் கவுண்டமணி-செந்தில் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அதேபோல் தான் தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவின் இடத்தை யாராலும் எட்ட முடியாது.

   

அந்த அளவிற்கு காமெடி விளையாடியுள்ளார், காமெடிக்கு காமெடியும், கருத்தும் இருக்கும். ஏன் மீம்ஸ் ஏதாவது ஒரு விஷயத்திற்கு எடுக்க வேண்டும் என்றால் அவரது காமெடி காட்சிகள் தான் முதலில் வரும். ஆனால் என்னவோ அவரை இப்போதெல்லாம் அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லை. வைகைப்புயல் வடிவேலு சினிமாவில் இருந்து தற்போது ஒதுங்கி இருக்கும் நிலையில் அவர் எப்போது மீண்டும் நடிக்க தொடங்குவார் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது வடிவேலுவின் சில போட்டோக்கள் வெளிவந்து இருக்கிறது. வடிவேலு மிகவும் ஒல்லியாக தற்போது மாறி இருப்பது அந்த போட்டோவில் தெரிகிறது. இந்த போட்டோ இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், வடிவேலு என்ன இப்படி ஆகிட்டாரே என கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.