கிராமத்துக்கு சென்று மனைவியின் அஸ்தியை கரைத்த கணவன் : பின்னர் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மனைவி உயிரிழந்த நிலையில் அந்த வேதனையில் கணவனும், மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன்(58). இவர் தனது மனைவி மீனா (45), மகன் மனோஜ் குமார் (26) ஆகியோருடன் ஓசூரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

   

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீனாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மீனா கடந்த மாதம் 16-ந் திகதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனைத் தொடர்ந்து மீனாவின் இறுதிச் சடங்குகள் அங்கேயே நடந்தது. இந்நிலையில் தன் மனைவியின் அஸ்தியை அவரது சொந்த ஊரில் கரைக்க முடிவு செய்தார் கனகராஜ்.

இதன் காரணமாக மனைவி மீனாவின் அஸ்தியை எடுத்துக்கொண்டு மகனுடன் தனது மாமனார் வீடான தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கிப்பட்டு கிராமத்துக்கு விரைந்தார்.

மனோஜ்குமாருடன் நரங்கிப்பட்டு கிராமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் மீனாவின் அஸ்தி கரைக்கப்பட்டது. பின்னர் மீனா இறந்த வேதனை கனகராஜனையும், மனோஜ்குமாரையும் வாட்டி எடுத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனகராஜன் அவரது மகன் மனோஜ் குமார் ஆகிய இருவரும் வீட்டில் உள்ள தனி அறையில் சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் சடலமாக கிடந்த இருவரது உடல்களையும் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட கனகராஜன் தங்கி இருந்து அறையில் ஒரு கடிதம் இருந்ததை பொலிசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை.

மீனா சென்ற இடத்திற்கே நாங்களும் செல்கிறோம் என்று கனகராஜன் கைப்பட எழுதி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.