கிருஷ்ணன் போல் ஆண் வேடத்தில் நடித்து அசத்திய செந்தூரப்பூவே சீரியல் நடிகை.. வைரலாகும் புகைப்படம்

தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று. லாக் டவுன் முன்பு ஏகப்பட்ட சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் டாப்பில் ஓடின. ரசிகர்களுக்கு ஏற்றார் போல் விதவிதமாக சீரியல்கள் ஓடுகின்றன. ஆனால் கொரோனா பிரச்சனையால் பல சீரியல்கள் அப்படியே நிறுத்தப்பட்டது, சில அதே பெயரில் வேறொரு கதையில் ஓடுகின்றன. சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட குடும்ப சீரியல் தான் செந்தூரப்பூவே.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக வெள்ளித்திரை கதாநாயகன், நடிகர் ரஞ்ஜீத் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி என்பவர் நடித்து வருகிறார். இளம் நடிகை ஸ்ரீநிதி, இதற்கு முன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் தறி எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியலை தவிர்த்து, நடிகை ஸ்ரீநிதி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கில் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்தும் வருகிறார் ஸ்ரீநிதி. இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் கிருஷ்ணன் போல் ஆண் வேடமிட்டு நடித்து அசத்தியுள்ளார் நடிகை ஸ்ரீநிதி. அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..