குக் வித் கோமாளி கனி இப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளாரா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சி மட்டுமே மக்க ளிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன்2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற ஒரு நிகழ்ச்சியாகும். சமூகவலைதள பக்கம் வந்தாலும் இந்நிகழ்ச்சி பற்றிய பேச்சுதான். தொலைக்காட்சியில் வருவதற்கு முன்னரே நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் வந்துவிடுவதால் அதில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலை காட்டிகிறார்கள்.

   

அதில் பார்ப்பவர்கள் வேறு ஒவ்வொரு அப்டேட்டாக இன்ஸ்டாவில் பதிவு செய்கிறார்கள். போட்டியாளர்கள், கோமாளிகள் என தனி தனியே அனைவரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றுவிட்டார்கள். நடிகை ஷகீலா அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி பெரிய பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம். தற்போது இந்நிகழ்ச்சியில் காரைக் குழம்பு வைப்பவர் என அனைவராலும் கிண்டலடிக்கப்படுபவர் கனி.

ஆனால் அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் அவர் நிகழ்ச்சியில் எப்போதும் ஜாலியாக இருப்பார். கனி குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் ஏன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அது ஒன்றும் இல்லை 10 வருடத்திற்கு முன் கனி சொல் விளையாட்டு என்ற நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் இப்போதும் அடையாளம் கண்டு அதை வைரலாக்கி வருகிறார்கள். அதோடு இப்போது உள்ள கனியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.