குக் வித் கோமாளி செட்டில் அஸ்வினை ஷாக் ஆக்கிய ஷிவாங்கி! கோவத்தில் திட்டிய அஸ்வின்.. என்ன செய்தார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குக் வித் கோமாளி 2-வில் நடிகை ஷகிலா, அஷ்வின், தர்ஷா, பவித்ரா லஷ்மி, மதுரை முத்து, பாபா பாஸ்கர், கடைக்குட்டி சிங்கம் தீபா போன்றோர் பங்கேற்று வரும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, தங்கதுரை போன்றோர் பங்கேற்று வருகிறார்கள்.

   

இந்நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி அட்ராசிட்டி ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது. அஸ்வின் நிறைய ஷார்ட் பிலிம் மற்றும் பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் ஹாட்ஸ்டார் டிஸ்னி பிளஸ்ஸில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் படத்திலும் நடித்துள்ளார் அஸ்வின்.

அண்மையில் குக் வித் கோமாளி செட்டில் அஸ்வின் ஏதோ பாட்டு பாடி ஆடிக் கொண்டிருக்கிறார். அதனை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அட்டகாசம் செய்துள்ளார் ஷிவாங்கி. வீடியோ எடுப்பதை கவனித்த அஸ்வின், ஷிவாங்கியை கேடி பெல்லொ என செல்லமாக திட்டியுள்ளார். அந்த வீடியோவையும் ஷிவாங்கி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டிருந்தார்.