குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து அஷ்வினுக்கு அடித்த அதிர்ஷ்டம்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிகழ்ச்சி தான் இப்போது மக்களின் பெரிய பேச்சாக உள்ளது. எவ்வளவு மன கஷ்டத்தில் இருந்தாலும் அவர்களை சிரிக்க வைக்கும் ஒரு பெரிய நிகழ்ச்சியாக உள்ளது. சமையல் போட்டி என்றாலும் சிரிப்புக்கு நிகழ்ச்சியில் பஞ்சமே இல்லை.

   

இந்நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி அட்ராசிட்டி ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது. அரைஇறுதி போட்டி நடந்து முடிந்து இந்த வாரம் Wild Card நடக்க இருக்கிறது. இந்த வாரத்திற்கான புரொமோவும் வெளியாகிவிட்டது, படு காமெடியாக இருக்கும் என இப்போதே தெரிகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய ரீச் பெற்றவர் அஷ்வின். அஸ்வின் நிறைய ஷார்ட் பிலிம் மற்றும் பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் ஹாட்ஸ்டார் டிஸ்னி பிளஸ்ஸில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் படத்திலும் நடித்துள்ளார் அஸ்வின். அவர் சில சீரியல் நடித்தாலும் பெரிய வரவேற்பு ஒன்றும் கிடைக்கவில்லை. தற்போது இந்நிகழ்ச்சியை தொடர்ந்து அஷ்வின் ஒரு மாஸ் பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளாராம். அந்த ஆல்பம் பாடலின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.