குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சி மட்டுமே மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. பிரபலங்களை வைத்து 100 நாள் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடையே நிறைய வரவேற்ப்பை பெற்று உள்ளது.

   

மிகவும் ரகளையான இந்த நிகழ்ச்சி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனுக்கும் நல்ல வரவேற்பு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து காமெடியும் இருப்பதால் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது. அதற்கு மிகவும் முக்கியமான காரணம் கோமாளிகளாக வரும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் தான்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், கோமாளிலாகவும் வரும் பிரபலங்களின் சம்பளம் விவரம் வெளியாகியுள்ளது. ஷகீலா = ரூ. 50 ஆயிரம், பாபா பாஸ்கர் = ரூ. 40 ஆயிரம், புகழ் = ரூ. 15 ஆயிரம், பாலா = ரூ. 15 ஆயிரம், மதுரை முத்து = ரூ. 40 ஆயிரம், அஸ்வின் = ரூ. 25 ஆயிரம், மணிமேகலை = ரூ. 20 ஆயிரம், சுனிதா = ரூ. 20 ஆயிரம், ஷிவாங்கி = ரூ. 20 ஆயிரம், தர்ஷா = ரூ. 10 ஆயிரம், பவித்ரா = ரூ. 10 ஆயிரம்.