குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது சீசன் தொடங்கி தற்போது அதுவும் ரசிகர்களிடையே பிக்பாஸில் விட அதிக அளவில் ரீச்சாகி உள்ளது. குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலமானவர் நடன இயக்குனர் பாபா பாஸ்கர். இந்த நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளது.

   

அதற்கு மிகவும் முக்கியமான காரணம் கோமாளிகளாக வரும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணி மேகலை உ ள்ளிட்டோர் தான். கோமாளிகளுக்கு சமமாக செம ஜாலியாக கமெண்ட் கொடுப்பதால் தற்பொழுது இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். அதிலும் சமீபத்தில் பாபா பாஸ்கர் மாஸ்டர் மாரி பாடல் கேட்டதும் யாரையாவது தூக்கிக் கொண்டு செல்லும் அட்ராசிட்டியெல்லாம் அதிகம்.

இந்நிலையில் எப்போது ஜாலியாக சுறுசுறுப்பாக இருக்கும் பாபா பாஸ்கர் குடும்பத்தோடு திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது மகன், மகள் மற்றும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படத்தை இணைய தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.