விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் ரகளையான இந்த நிகழ்ச்சி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனுக்கும் நல்ல வரவேற்பு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வாரா வாரம் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சி நடக்க ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். கலாட்டாக்களுக்கு பஞ்சமே இல்லை. மக்கள் சிரிப்புதோடு சில சமையல் விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து காமெடியும் இருப்பதால் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது. அதற்கு மிகவும் முக்கியமான காரணம் கோமாளிகளாக வரும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் தான். அதேபோல் இந்நிகழ்ச்சியில் நடுவராக வரும் தாமு மற்றும் வெங்கடேஷ்பட் அவர்களும் மிகவும் பிரபலம். நிறைய சமையல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விதவிதமாகவும் சமைத்துள்ளார்.
இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக வந்து கலக்கி வருகிறார். இந்த வாரம் எப்படி இருக்குமோ நிகழ்ச்சி. இதில் நடுவராக வரும் வெங்கடேஷ் பட்டும் சேர்ந்து நிறைய காமெடிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார். வெங்கடேஷ் பட்டின் சமையல் பார்த்த நமக்கு அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அவரது மனைவி மிகவும் அழகாக உள்ளார் என கமெண்ட் செய்கின்றனர். இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்,