குட்டிக் குழந்தைக்கு கொரொனா டெஸ்ட் எடுக்க வந்த டெக்னீசியன்… குழந்தை படுத்துன பாட்டைப் பாருங்க.. வைரலாகும் வீடியோ

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்றில் இருந்து காக்கும்வகையில் முழு லாக்டவுண் போடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றானது முதல் அலையை விட, இரண்டாவது அலையில் மிகத் தீவிரமாக இருக்கிறது. இதில் அதிக அளவில் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. ஏராளமான குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு தங்கள் குழந்தைகளையே இழந்து உள்ளனர். அது மட்டும் இல்லாமல் இப்போது வரும் கொரோனா நுரையீரலில் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்துகிறது. கூடவே திடீரென ஹார்டியாக் அரெஸ்டையும் ஏற்படுத்துகிறது.

   

குழந்தைகளையும் கொரோனாவின் இரண்டாவது அலை விட்டுவைக்கவில்லை. பல குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என வீடுகளுக்கே போய் டெஸ்டிங் செய்யும் பணியில் லேப் டெக்னீசியன்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரசு, இதற்கான கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளது.அதில் டெக்னீசியன்கள் மூக்குக்கு உள்ளே குச்சியை விட்டுத்தான் சளி பரிசோதனை செய்கிறார்கள். அது மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்கத்தோணும் என இங்கிலீஸ்காரன் படத்தில் வடிவேலு மூக்கில் மிளகாயை விடுவதைப் போல் படுத்தி எடுத்திவிடும்.

இங்கேயும் அப்படித்தான். ஒரு குழந்தைக்கு டெஸ்ட் எடுக்க வந்தார் டெக்னீசியன். அப்போது அந்த சுட்டிக்குழந்தை மூக்கில் குச்சியை விட மறுத்து க்யூட்டாக செல்ல அடம் பிடிக்கிறது. அதை சமாளித்து ஒருவழியாக டெக்னீசியன் சளி பரிசோதனை செய்ய குழந்தை கடைசியில் எழுந்து க்யூட்டாக ஒரு ஆட்டமும் போட்டது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.