கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி வீசும் அவலம்: பதபதைக்க வைக்கும் காட்சி..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவரின் சடலம் பாலத்தின் மேலிருந்து வீசப்படும் காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காட்சி Balrampur மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவில், பிபிஇ உடை அணிந்த ஒருவர் உட்பட இரண்டு நபர்கள் கொரோனாவால் இறந்தவரின் உடலை பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி வீசுகின்றனர். அந்த வழியே காரில் சென்றவர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவ செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

   

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர், ஆற்றில் தூக்கி வீசப்பட்ட உடல் பிரேம் நாத் மிஸ்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரேம் நாத் மிஸ்ராவுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவர் மே 25ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மே 28ம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக Balrampur தலைமை மருத்துவ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.