கொரோனாவிலிருந்து தப்பிக்க நூதனமுறையில் ஆவி பிடிக்கும் வாலிபர்… வைரலாகும் புதுடெக்னிக் வீடியோ

கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலகநாடுகளையும் உலுக்கி வருகிறது. அதிலும் இந்தியாவில் அதன் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருக்கிறது. நாடு முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். 577 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வை அரசாங்கமும் வழங்கியுள்ளது. இப்படியான சூழலில் மக்கள் பலரும் வீட்டிலேயே ஆவி பிடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி ஆவி பிடிப்பதில், சிலர் மெடிக்கல் ஸ்டோர்களில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கிப் போட்டு ஆவிபிடிக்கின்றனர். இன்னும் சிலரோ, வேப்பிலை, துளசி, நொச்சி போன்ற இலைகளைப் போட்டு இயற்கையான முறையில் ஆவி பிடிக்கின்றனர்.

ஆனால் அதிலும் இங்கே ஒருவர் செம வித்தியாசமான முறையில் ஆவி பிடிக்கிறார். அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா? அதில் அவர் குக்கரின் விசிலில் 90 டிகிரி பைப்பை இணைத்து, மற்றொரு பக்கத்தில் புனலைச் சொருகி ஆவி பிடித்து வருகிறார். குக்கரில் சாதம் வடிக்கும் அதே நேரத்தில் ஆவியும் பிடிக்கும் அவரது திறமை இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..