கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவை பயங்கரமாகத் தாக்கி வரும் நிலையில், தமிழத்தில் மக்களின் நிலை மோசமாகவே இருந்து வருகின்றது. சாதாரண மக்கள் மட்டுமின்றி, அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்ட்ராயன் கடந்த வாரம் தொற்றில் பாதிக்கப்பட்டதுடன், காணொளி ஒன்றினையும் வெளியிட்டிருந்தார். அதில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.
தற்போது தொற்றிலிருந்து மீண்டுவந்த செண்ட்ராயன் கொரோனா டெஸ்ட் எடுத்ததில் நெகட்டிவ் வந்துள்ளது, என்னை விட்டு கொரோனா போயிடுச்சி என்றும் கருப்பு பூஞ்சை குறித்தும், அதற்கு மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை காணொளியாக குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram