சன் டிவி சீரியலில் நடித்துள்ள நடிகர் சந்தானம்- அதுவும் இந்த சூப்பர்ஹிட் சீரியலிலா இது தெரியாம போச்சே

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சாப என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். அதன்பின் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முக்கியமான காமெடியன் என்று பேரெடுத்தார்.

   

அதனை தொடர்ந்து காமெடியனாக மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடிக்க துவங்கிய சந்தானம், எ1, தில்லுக்கு துட்டு, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சந்தனத்தை நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் நடித்து தான் பார்த்திருக்கிறோம். ஆனால் நடிகர் சந்தானம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் அண்ணாமலை எனும் சூப்பர்ஹிட் சீரியலில் நடித்துள்ளார்.

ஆம் ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த, அண்ணாமலை சீரியலில் சந்தானம் நடித்துள்ள காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..