கொரோனா அச்சம் மக்களிடம் அதிகம் உள்ளது. அன்றாடம் செய்திகளில் வரும் உயிரிழப்புகள் குறித்து விவரம் மக்களுக்கு பெரிய பயத்தை கொடுத்து வருகின்றன.
அரசும் இப்போது கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர். வரும் நாட்களில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த நடன இயக்குனர்களில் ஒருவர் சாண்டி. இவர் இப்போது விஜய் தொலைக்காட்சியில் BB Jodigal நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.
நேற்று (மே 25) இவரது மகள் லாலாவிற்கு 3வது வயது பிறந்தநாள் வந்துள்ளது, தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் சாண்டி தனது வீட்டின் மாடியிலேயே சிம்பிளாக எந்த கூட்டமும் இல்லாமல் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்களை சாண்டியின் மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.