சினிமா பாடலை பள்ளி தேர்வில் எழுதியிருந்த மாணவன்.. ஆசிரியரின் செயலால் நடந்த விபரீதம்!

தமிழகத்தில் பள்ளி தேர்வில் சினிமா பாடலை எழுதிய மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் பள்ளியில் தாவரவியல் தேர்வு நடந்த நிலையில் அதில் கார்த்திக் பங்கேற்றார். அந்த தேர்வில் கேட்கப்பட்ட தெரியாத கேள்வி சிலவற்றுக்கு கார்த்தி சினிமா பாடல்களை தேர்வு தாளில் எழுதியுள்ளார்.

   

இதையடுத்து, விடைத்தாள்களை திருத்திய தாவரவியல் ஆசிரியர் சகாதேவன் அதை கண்டு அதிர்ச்சி ஆகியுள்ளார். அதன் பின்னர் மாணவன் கார்த்திக்கை அழைத்த ஆசிரியர் கடுமையாக கடிந்துள்ளார். மேலும், மாணவன் கார்த்திக்கின் விடைத்தாளில் உள்ளவற்றை வகுப்பில் மற்ற மாணவர்களுக்கு முன்பு படிக்க வைத்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆசிரியர் சகாதேவன் மாணவனின் அச்செயலை பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவமானமடைந்த கார்த்திக் வீட்டில் வெகுநேரம் அழுத நிலையில், திடீரென நள்ளிரவு 1 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் சடலத்தை யாருக்கும் தெரியாமல் குடும்பத்தார் தகனம் செய்துள்ளனர். இது குறித்து கார்த்திக் பெற்றோர் புகார் கொடுக்காததால் எப்படி நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் பொலிசார் குழம்பி வருகின்றனர்.