தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவயானி. அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தேவயானி. அதனைத் தொடர்ந்து, அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் விஜய், அஜித், விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார்.
அழகான சிரிப்பாலும், அசத்தலான நடிப்பாலும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் தேவயானி. புகழின் உச்சத்தில் இருந்த போது இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் இருக்கின்றனர். கோலங்கள் என்ற சீரியல் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை தேவயானி. படங்களில் கலக்கியிருந்தாலும் அவர் நடித்த சீரியல் தான் அதிகம் கொண்டாடப்பட்டது.
அந்த சீரியலுக்கு பின் தொலைக்காட்சி பக்கம் அவரை காணவில்லை. தற்போது தேவயானி மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளார். அவர் ஜீ தமிழில் புதிதாக தொடங்க இருக்கும் புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடிக்க இருக்கிறாராம். இந்த சீரியல் Aggabai Sasubai மராத்தியில் உருவான சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram