சிவகார்த்திகேயன் தந்தைக்கு என்ன நடந்தது?? சுட்டுக் கொல்லப்பட்டாரா?? பல வருடங்கள் கழித்து வந்த உண்மை!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தற்போது யாருமே எதிர்பார்க்காத ஒரு உச்சத்தை அடைந்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.

முன்னை நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நிலையை எட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது திறமையாலும், விடா முயற்சியினாலும் இன்று புகழின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் நடிகர்.

   

இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியும் பெறுகிறது.

சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய திறமையால் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

சிவகார்த்திகேயன் தந்தையை இழந்தவர் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். தற்போது அவரது தந்தை குறித்து ஒரு கருத்தை ஹெச் ராஜா வெளியிட்டுள்ளார். அதாவது அவரது தந்தை ஜெயப்ரகாஷ் ஜெய்லராக பணிபுரியும்பொது கொல்லப்பட்டதாக கூறியுள்ளார்.

இதைக்கண்டு ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்து விசாரித்ததில் சிவகார்த்தியேகனின் அப்பா பெயர் தாஸ் என்பதும் அவர் ஜெயிலராக இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

பின்னர்தான் எச்.ராஜா சொல்வது போல் சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ஜெயபிரகாஷ் இல்லை, மேலும் ஜெயப்பிரகாஷ் துணை ஜெயிலராக இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.