சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகனா? வாயடைத்துப்போன ரசிகர்கள்! வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்

   

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களை, நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலம். அதிலும் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், நாம் இருவர் நமக்கு இருவர், பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜா போன்ற பல்வேறு தொடர்களும், ரியாலிட்டி ஷோக்களும் வெற்றி கரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதில் நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகம் வெற்றிகரமாக மக்கள் வரவேற்பை பெற்று ஓடியது.

தற்போது முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்தில் ஹீரோவாகவும், ’சரவணன் மீனாட்சி’யில் நடித்து புகழ் பெற்ற ரச்சிதா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளுடன் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பவர் காயத்ரி யுவராஜ்.

இவர் இந்த சீரியலுக்கு முன் சில சீரியல்கள், நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். காயத்ரியின் கணவர் யுவராஜ் ஒரு நடன கலைஞராவார். இவர்களுக்கு தருண் என்கிற மகன் உள்ளார். அண்மையில் காயத்ரி தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என கமெண்ட் செய்து வருகின்றனர்.