விஜய் தொலைக்காட்சயில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடரான பாரதி கண்ணம்மா வை தெரியாதவர்கள் இருக்க முடியாது.அநத அளவிற்கு சின்னத்திரையில் பிரபலமானதைக் காட்டிலும் சமூக வலைத்தளங்களில் மீம்களின் மூலம் பிரபலமானதே அதிகம். இந்த அளவு பேமஸான தொடரில் வில்லத்தனத்தில் விளையாடி வருபவர் வெண்பா கதாபாத்திரத்தில் வலம்.
வருபவர் தான் நமது பரீனா ஆசாத்.இவர் தொடக்கத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை துவங்கியவர்.ஆரம்பத்தில் புதுயுகம் சேனலில் ஒரு நிமிடம் ப்ளீஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் அதன் பின் கிச்சன் கில்லாடி ,அஞ்சரைப்பெட்டி எனும் சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.
அதன்பின் சன் டிவியில் ஒளிப்பரப்பான.அழகு தொடரின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார்.இத்தொடரில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதன் மூலம் பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க ஒப்பந்தமானார்.தற்போது அந்த தொடரின் நடிப்பதன் மூலம் மக்களிடையே தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
30 வயதான பரீனா ஆசாத் 2017-ம் ஆண்டு அக்டோபர் 20 ம் தேதி தன்னடைய.நிகழ்ச்சியில் எடிட்டாராக இருந்த ரஹ்மானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவரது திருமணம் இருவீட்டார்களின் சம்மதத்துடன் நடைபெற்றது.அதன்பின் இருவரும் சந்தோஷமாக திருமண வாழ்க்கையை கொண்டாடி.வந்தனர்.
இருவரும் இணைந்து MR&MRS சின்னத்திரை மற்றும்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமடைந்தனர்.இந்நிலையில் என்ன ஆனதோ தெரியவில்லை இருவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.இந்நிலையில் இரண்டு வருடங்களாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் பரீனா ஆசாத் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் எங்கள் இருவருக்கும் இடையேயான இடைவெளி எங்களுக்குள் ஒரு புரிதலை உண்டாக்கியதாகவும் தற்போது தனது கணவர் ரஹ்மானுடன் இணைந்து ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
சினிமாத்துறையில் இவ்வாறான நிகழ்வுகள் சாதாரண ஒன்றாக இருந்த போதிலும் பரீனா மீண்டும் தனது கணவருடன் இணைந்து வாழ்வது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.பாரதி கண்ணம்மாவில்.பாரதியை கண்ணம்மாவிடம் இருந்து பிரிக்க நினைக்கும் வெண்பா எனும் பரீனா நிஜ வாழ்வில் கணவரிடமிருந்து பிரிந்து மீண்டும் சேர்ந்திருப்பது சந்தோஷமாக இருப்பதாக அவரது ரசிகர்களின் மத்தியில் கமெண்டுகள் பரவிய.வண்ணம் உள்ளது.என்னதான் பரீனா சின்னத்திரையில் வில்லியாக இருந்தாலும் இந்த பதிவின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்…