சுந்தரி நீயூம் சுந்தரன் மற்றும் நாயகி சீரியல் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு! வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்..

தமிழ் தொலைகாட்சிகளில் திரைப்படங்களை விட சீரியல் பார்ப்பவர்களே மிகவும் அதிகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொலைகாட்சிகளிலும் திரைப்படங்களை ஒளிபரப்புவதை விட சீரியல்களை ஒளிபரப்புவதற்கே முக்கியத்துவம் கொடுகின்றனர். தமிழ் சினிமாவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போலவே சீரியலுக்கும் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு இப்போது பொழுதுபோக்காக அதிகம் இருப்பது சீரியல்கள் தான்.

   

மக்களின் ரசனைக்கு ஏற்ப சீரியல்கள் அதிகம் புதிது புதிதாக வருகின்றன. பழைய சீரியல்கள் முடிய புதிய சீரியல்கள் அதிகம் வருகிறது. அப்படி அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் சுந்தரி நீயூம் சந்தரன் நானும் என்கிற சீரியல் முடிவுக்கு வந்தது. சீரியல் முடியும் சில மாதங்களுக்கு முன் புதிய என்ட்ரீ கொடுத்தவர் நடிகர் ரஞ்சித். இவர் சீரியலில் நாயகன் நண்பராக வந்தார். தற்போது இந்த சீரியல் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் நடிகர் ரஞ்சித்திற்கு உறவினர்கள் சூழ நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை ரஞ்சித் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ரஞ்சித் இந்த சீரியலை தாண்டி நாயகி, யாரடி நீ மோகினி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ranjit Babu (@ranjit__official__)