சூப்பர் சிங்கர் செட்டில் சிவாங்கி செய்த சேட்டை! என்ன அழகா கீ போர்டு வாசிக்கிறாங்க!! வைரல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சி திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், அதுவே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

   

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது நடிகை ஷகிலா, அஸ்வின், பவித்ரா லட்சுமி, பாபா பாஸ்கர், கனி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக உள்ளனர். மேலும், புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத் ஆகியோர் கோமாளிகளாக செம சேட்டைகள் செய்து வருகின்றனர். அதிலும் சிறுபிள்ளைத்தனமாக ஷிவாங்கி செய்யும் ரகளைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவருக்காகவே நிகழ்ச்சிகள் பார்ப்பவர்கள் பலர். ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.

இந்நிலையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் செட்டில் கார்த்திக் தேவராஜின் உதவியுடன் கீ போர்டு வாசித்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். கீ-போர்டு குருனா கார்த்திக் தேவராஜ் தான் என்று குறிப்பிட்டுள்ளார். வாசிப்பது ஹேப்பி பர்த்டே டூ யூ தான் என்றாலும், சிவாங்கி வாசிக்கும்போது பின்னணியில் வாசிக்கும் கலைஞர்கள் கானா மோடில் ரிதம் வாசித்து சிவாங்கியை கலாய்த்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)