சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மேடையில் கதறிய அழுத போட்டியாளர்.. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய தருணம்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் பேராதரவுடன் பல சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியின் மூலம் தற்போது வரை பல பின்னணி பாடகர், பாடகிகள் தமிழ் சினிமாவில் வந்துள்ளனர். சீசன் 1ல் இருந்து 8 வரை மக்களில் வரவேற்பில் வளர்ந்து வந்துள்ளது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. லாக் டவுன் போட்டதால் இந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.

   

இதில் தற்போது 8வது சீசன் துவங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சூப்பர் சிங்கர் 8 சீசன் விஜய் டிவியில் நடந்து வர, இதிலும் பல திறமையாளர்கள் ஒவ்வொருவருடன் போட்டியிட்டு வருகின்றனர். ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் பலர் இருப்பார்கள்.

அப்படி சூப்பர் சிங்கர் சீசன் 8ல் தனது பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள போட்டியாளர் தான் புரட்சி மணி. இவர் சென்ற சூப்பர் சிங்கர் 7ல் கலந்து கொண்ட செந்தில் ராஜலட்சுமி தம்பதியினரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில், தனது குடும்ப கஷ்டத்தை கூறி கண்கலங்கி அழுகிறார் புரட்சி மணி. மேலும் என் தாயால் மட்டும் தான், நான் இங்கு நிற்கிறேன். என்றும் அனைவரும் கண்கலங்கும்படி பேசியுள்ளார்.