சூப்பர் சிங்கர் பிரபலம் செந்தில் கணேஷின் தங்கையா இது? மாடர்னா உடையில் எப்படி இருக்காங்க பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள்

வெகு காலமாக மக்களுக்கு புது புது நிகழ்சிகளையும் தொடர்களையும் அறிமுகம் செய்து புகழடைந்து வருவது விஜய் தொலைக்காட்சி என்றே கூறலாம். இப்படி ஆடல் பாடல், நடனம் ,நடிப்பு என அனைத்திற்கும் தனித்தனியாக நிகழ்சிகளை அறிமுகம் செய்து பல திறமையானவர்களை வளர்த்து வருகிறது. இப்படி இந்த தொலைக்கட்சியில் இருந்து திரைக்கு சென்றவர்கள் தான் அதிகம். இப்படி இந்த தொலைகாட்சியில் வெகு காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

   

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்த ஜோடிகள் அடிக்கடி வெளிநாடுகள் செல்வதும், சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதும் என தற்போது பிஸியாகவே உள்ளனர். சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் தனது தங்கையின் பிறந்த நாளை அண்மையில் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கணேஷ்க்கு இப்படி ஒரு மார்டனான தங்கை இருக்கின்றாரா என்று வாயடைத்து போயுள்ளனர். அது மாத்திரம் இன்றி வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். தற்போது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.