சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நிற்கும் இந்த பிரபலம் யாரு தெரியுமா? தற்போது அவரும் ஒரு சினிமா நட்சத்திரம் தான்! புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது. இவருக்கு உலகம் முழுவதிலும் அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

   

மேலும் அப்படத்தின் படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் ரஜினியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பின்னர் உடல்நிலை காரணமாக அரசியலில் இருந்து பின்வாங்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த செய்தி ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை அளித்தது.

இதனிடையே அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை கட்டிப்பிடித்து கொண்டு நிற்கும் ராகவா லாரன்ஸின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இவர் தற்போது மிகவும் பிரபலமான நடிகராக இருந்தாலும் தான் ரஜினியின் மிக பெரிய ரசிகன் என்பதை பல மேடைகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்படம் இதோ…