செம்பருத்தி சீரியல் ப்ரியா ராமனின் முன்னாள் கணவர் ரஞ்சீத்தின் இரண்டாவது மனைவி யாரு தெரியுமா? வெளியான திருமண புகைப்படம்!!

தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் ஜீ தொலைக்காட்சியும் ஒன்று. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அதில் செம்பருத்தி சீரியலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இதில் கார்த்திக்-ஷபானா ஜோடி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்த சீரியல் செய்யாத சாதனைகள் இல்லை, ஒரு காலத்தில் இந்த சீரியல் TRPயில் முதல் இடத்தை எல்லாம் பிடித்தது.

   

இடையில் சீரியலில் ஏகப்பட்ட நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளது, முக்கியமாக சீரியல் நாயகன் மாற்றம் ஆன பிறகும் ரசிகர்கள் மத்தியில் சீரியல் பிடு பிரபலமாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி எனும்கதாபாத்திரம் மிகவும் பிரபலம். அதில் நடித்து வருபவர் நடிகை ப்ரியா ராமன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வள்ளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியா ராமன்.

நடிகை ப்ரியா ராமன், நடிகர் ரஞ்சீதை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் 15 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2014ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்து பின் நடிகை ப்ரியா ராமன் திருமணம் செய்துகொள்ள வில்லை என்றாலும், நடிகர் ரஞ்ஜீத் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரஞ்ஜீத்தின் இரண்டாவது திருமணமும் ஒரு வருடத்தில் விவகாரத்தில் முடிந்தது. நடிகர் ரஞ்சீத்தின் இரண்டாவது திருமணம் புகைப்படம் இதோ..