சேது படத்தில் விக்ரம் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? இந்த முன்னணி நடிகர் தானா!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர் சீயான் விக்ரம். இவரின் நடிப்புக்கே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் நடிப்பில் கடைசியாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியானது. நடிகர் விக்ரம் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக விக்ரம் நடிப்பில் பெரிய படம் என்றால் அது பொன்னியின் செல்வன் படம் தான். இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

   

இவர் கோப்ரா திரைப்படத்தில் பிஸியாகி விட்டார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் பாலா தமிழ் சினிமாவிலேயே மிகவும் வித்தியாசமான ஒரு இயக்குனர். அவரது படத்தை பார்த்தாலே மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி மக்களால் மிகவும் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு படம் சேது.

இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதில் விக்ரம் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடங்கவே பாலாவிற்கு பல வருடங்கள் ஆனதாம். அதேபோல் நாயகனாக நடிக்க விக்ரம் முன் செல்வா, விக்னேஷ், முரளி போன்ற நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்ததாம். இறுதியில் பட வாய்ப்பு விக்ரமிற்கே சென்றுள்ளது.