சைக்கிளிங் செல்லும் போது விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா.. காயங்களுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவில் இன்று வேண்டுமானால் பல முன்னணி இளம் நடிகைகள் பலரும் அறிமுகமாகலாம் மக்களின் மனதில் இடம் பிடிக்கலாம் ஆனால் இவர்கள் ஒரு சில திரைப்படங்களிலேயே அடையாளம் தெரியாமல் சென்று விடுகின்றனர். 90களில் கலக்கிய நடிகைகள் பலர் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள். அந்த நடிகைகள் லிஸ்டில் ஒருவர் மாளவிகா. நல்ல நடிகை தான், ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

   

அஜித்தின் உன்னைத் தேடி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தார். ஹீரோயினாக மட்டுமின்றி சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ள மாளவிகா, 2007ம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு எப்போதும் ஆக்டிவாகவே இருப்பார்.

படு காயங்களுடன் மாளவிகா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சைக்கிளிங் செல்லும் போது விபத்தில் சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அதில், தன்னுடைய கைவிரலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், விரைவில் மீண்டு வருவேன் எனவும் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.