சொந்தமாக புதிய வீடு கட்டும் நடிகர் தனுஷ்! வீட்டின் முழு மதிப்பை கேட்டு அதிர்ந்துபோன திரையுலகினர்..!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகி இருப்பவர் நடிகர் தனுஷ். அதுமட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் நடித்து சாதனைகளை புரிந்து வருகிறார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தமிழ் மொழி திரைப்படங்களிலும் மற்றும் ராஞ்சனா (2013) போன்ற இந்தி திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

   

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆம் இவர் நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட படங்களில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது அவரின் ஹாலிவுட் படத்திற்காக USA சென்றுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர். சமீபத்தில் நடிகர் தனுஷ் தனக்கு சொந்தமாக புதிய வீடு ஒன்றை தனது மாமனார் நடிகர் ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் ஏரியாவில் கட்ட பூஜை போட்டார். இந்நிலையில் இந்த வீட்டின் முழு மதிப்பு 80 கோடி என தெரிவிக்கின்றனர். ஆம் நடிகர் தனுஷ் தனது சொந்தமான வீட்டிற்காக 80 கோடி வரை செலவு செய்து கட்டி வருகிறாராம்.