ஜீ தமிழின் பிரபல சீரியல் முடியப்போகிறதா? வெளியான தகவல்- வருத்தத்தில் ரசிகர்கள்

தமிழ் தொலைகாட்சிகளில் திரைப்படங்களை விட சீரியல் பார்ப்பவர்களே மிகவும் அதிகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொலைகாட்சிகளிலும் திரைப்படங்களை ஒளிபரப்புவதை விட சீரியல்களை ஒளிபருப்புவதர்க்கே முக்கியத்துவம் கொடுகின்றனர். தமிழ் சினிமாவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோலவே சீரியலுக்கும் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. முன்பெல்லாம் திரைப்பட நடிகர், நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

   

ஆனால் இப்போதெல்லாம் அதற்கு இணையாக தொலைக்காட்சியின் நடிகைகளுக்கும் இருக்கிறது. சீரியல் நடிகைகள் பலர் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்துள்ளார்கள். முன்னணி தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பிரபலமானது ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அதிலும் யாரடி நீ மோஹினி, செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களுக்கு லட்ச கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி சீரியல் முடிவுக்கு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு காரணம், யாரடி நீ மோஹினி சீரியலில் வில்லி கதாபாத்திரம், ஸ்வதா மரணமடைந்து விடுவதுபோல் புகைப்படம் வெளியாகியுள்ளது. சீரியலின் முக்கிய கதாபாத்திரம் இந்த நிலையில் முடிவடைகின்றதால், சீரியல் முடிவுக்கு வந்துள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்று குறிப்பிடத்தக்கது.